Published Date: December 8, 2025
CATEGORY: CONSTITUENCY
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் தி இந்தியன் காலேஜ் ஆப் எமர்ஜென்சி மெடிசன் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருக்கும் உலகளாவிய இந்திய இயக்க மற்றும் சுவாசம் மீட்பு மாநாடு 2025 மதுரையில் நடைபெற்றது.
இதையொட்டி மாநாட்டிற்கு முந்தைய சிறப்பு பயிலரங்குகள் கடந்த 4மற்றும் 5 - ந் தேதிகளில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையிலும் தொடர்ந்து முக்கியமான நிகழ்வுகள் 6மற்றும் 7-ந் தேதிகளில் மதுரையில் உள்ள தனியார் ஹோட்டலிலும் நடைபெற்றது .இதில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், மருத்துவக் கல்லூரி துறையின் பேராசிரியர்களும் பங்கேற்றனர். தொடக்க விழாவில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். கவுரவ விருந்தினராக ராஜா சபாபதி, சிறப்பு அழைப்பாளர்களாக அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஜான்கிம், இத்தாலியை சேர்ந்த அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் சர்வதேச செயல்திட்ட நிர்வாகி மரிடா ஸ்ட்ராச்சியா மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவ நிர்வாகி கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மாநாட்டின் அமைப்புக்குழு தலைவர் நரேந்திர நாத் ஜெனா தலைமை தாங்கினார். இவ்விழாவில் மாநாட்டின் கருப்பொருள் அறிவியல் திட்டங்கள் மற்றும் பங்கேற்கும் துறை நிபுணர்கள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய சிறப்பு நினைவு மலர் வெளியிடப்பட்டது.
மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் குருசங்கர் இத்தகைய உலகளாவிய மாநாட்டு நிகழ்வு மதுரையில் நடத்தப்படுவது குறித்து தனது மகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முதுநிலை மற்றும் இளம் பேராசிரியர்களின் சிறப்புரைகள், 10-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் செய்முறைப் பயிற்சிகள், வாய்மொழி மற்றும் சுவரொட்டி விளக்கக் காட்சிகள், உருவாக்கப்படுதல் போட்டிகள் மற்றும் வினாடி- வினா உள்ளிட்ட பல்வேறு கல்வி சார் போட்டிகள் நடைபெற்றன.
Media: Malaimalar